முகப்புபாலிவுட்

ஆல்பம் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், நயன்தாரா - வைரலாகும் வீடியோ

  | December 06, 2018 16:19 IST
Jai Hind India

துனுக்குகள்

  • நடிகை நயன்தாரா கைவசம் 9 படங்கள் உள்ளது
  • ‘ஜெய் ஹிந்த் இந்தியா’ என்ற ஆல்பம் பாடலில் நயன்தாரா நடித்துள்ளார்
  • இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததோடு, நடிக்கவும் செய்துள்ளார்
‘இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்', சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்', நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா', சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா', அறிவழகன் படம், சர்ஜுனின் ‘ஐரா', சிவகார்த்திகேயன் படம், விஜய் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இந்நிலையில், ‘ஜெய் ஹிந்த் இந்தியா' என்ற ஆல்பம் பாடலில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த ஆல்பம் இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமகாவும் தயாராகியுள்ளது.
 

இதற்கு ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததோடு, நடிக்கவும் செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாராவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இதில் நடித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதன் முழு வெர்ஷனை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்