முகப்புபாலிவுட்

அமீர்கானின் இன்ஸ்டகிராம் என்ட்ரி, முதலில் பதிவிட்ட புகைப்படம் யாருடையது தெரியுமா?

  | March 14, 2018 13:05 IST
Aamir Khan Next Film

துனுக்குகள்

  • அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’
  • இப்படத்தை நவம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டரில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் அமீர் கான்
பாலிவுட்டில் ‘டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’. ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்து வருகின்றனர். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இதில் அமீர் கானுடன் அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அஜய் – அதுல் இணைந்து இசையமைத்து வரும் இதற்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார், நம்ரதா ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் ஜோத்பூரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இந்தாண்டு (2018) நவம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டரில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் அமீர் கான். இந்நிலையில், இன்று (மார்ச் 14-ஆம் தேதி) தனது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அமீர் கான் என்ட்ரியாகியுள்ளார். இன்ஸ்டாவில் முதல் பதிவாக தன்னுடைய அம்மா ஸீன்டா ஹுசைனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அமீர். மேலும் அமீரின் இன்ஸ்டா வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க, பாலோயர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்