முகப்புபாலிவுட்

லக்னோ சாலையில் டிராஃபிக்கை சரி செய்த நடிகர் ஜாக்கி செராஃப்

  | July 23, 2018 16:46 IST
Jackie Shroff

துனுக்குகள்

  • பாலிவுட்டில் பிரபல நடிகர் ஜாக்கி செராஃப்
  • தமிழில் கடைசியாக மாயவன் படத்தில் நடித்தார்
  • இவரின் வீடியோ ஒன்று வைரலானது
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி செராஃப். தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா எனப் பல மொழிகளில் நடித்தவர் தமிழில் `ஆரண்யகாண்டம்' `மாயவன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது `பிரஸ்தானம்' என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக செல்லும் போது லக்னோ சாலையில் டிராஃபிக்கில் மாட்டியிருக்கிறார். உடனடியாக அவர் செய்த விஷயம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. காரில் இருந்து இறங்கிய ஜாக்கி, அந்த டிராஃபிக்கை சரிசெய்யத் துவங்கியிருக்கிறார். இந்த டிராஃபிக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட, கொஞ்ச நேரத்திலேயே வீடியோ வைரலாகி இருக்கிறது.
தற்போது சஞ்சய் தத் நடிப்பில் உருவாகும் `பிரஸ்தானம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தேவ கட்டா இயக்கத்தில் தெலுங்கில் இதே பெயரில் வெளியான படத்தின் ரீமேக்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்