முகப்புபாலிவுட்

பேட்மேன் சேலஞ்: நாப்கினுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள்

  | February 03, 2018 13:13 IST
Padman Challenge

துனுக்குகள்

  • அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கதை `பேட்மேன்' ஆக படமாகியிருக்கிறது
  • இந்தப் படத்தை பால்கி இயக்கியிருக்கிறார்
  • பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது இப்படம்
மலிவு விலை சானிடரி நேப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் தயாராகியிருக்கும் படம் `பேட்மேன்'. அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பால்கி.

பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்த வித்தியாசமான உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது படக் குழு. கையில் சானிடரி நேப்கினுடன் புகைப்படம் எடுத்து, இதே போல புகைப்படம் எடுத்து பகிரவும் என பாலிவுட் பிரபலங்கள் தங்களுக்குள் சவால்விட்டுப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
 

அருணாச்சலம் முருகானந்தம் முதலில் இதைத் துவங்கி வைத்து, படக்குழுவினரான அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர், படத்தின் தயாரிப்பாளரும் அக்ஷயின் மனைவியுமான டிவிங்கிள் கண்ணா ஆகியோருக்கு சவால் விட, அவர்களும் நேப்கினை கையில் வைத்தபடி புகைப்படங்களைப் பகிர்ந்து மற்ற பிரபலங்களுக்கு சவால்விட்டனர். ஆமீர்கான், அலியா பட் எனப் பலரும் இந்த சவாலில் பங்கெடுக்க வைரலாகி வருகிறது `பேட்மேன்' சேலஞ்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்