முகப்புபாலிவுட்

ரஷ்யாவில் ரிலீஸாகும் 'பேட்மேன்'

  | February 07, 2018 12:40 IST
Padman

துனுக்குகள்

  • அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் கதை `பேட்மேன்' ஆக படமாகியிருக்கிறது
  • நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்
  • இப்படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்மேன்’ (PADMAN). கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மைய்யமாக வைத்து கதைக்களம் அமைத்துள்ள இப்படத்தை ஆர்.பால்கி இயக்கியுள்ளார். ஏழைப் பெண்களுக்காக குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர் அருணாச்சலம் முருகானந்தம். அதற்காக, அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அக்ஷய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தன் அரோரா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஹோப் புரொடக்ஷன்ஸ் – COLUMBIA பிக்சர்ஸ் – MRS FUNNYBONES மூவீஸ் – SPE ஃபிலிம்ஸ் இந்தியா – KRIRAJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 
சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ், டீஸர், பாடல்கள் மற்றும் டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, அக்ஷய் குமார் டிவிட்டரில் “இந்தியாவில் ரிலீஸாகவிருக்கும் அதே நாளில் (பிப்ரவரி 9), ரஷ்யாவிலும் வெளியாகும் முதல் ஹிந்தி திரைப்படம் ‘பேட்மேன்’ தான்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்