விளம்பரம்
முகப்புபாலிவுட்

ரிபெல் ஸ்டாருடன் டூயட் பாட விரும்பும் அலியா பட்

  | May 16, 2017 15:03 IST
Celebrities

துனுக்குகள்

  • இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டியுள்ளார் ராஜமௌலி
  • பல முன்னணி சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்
  • அலியா பட்டின் ட்விட்டுக்கு கேள்வி எழுப்பிய ரசிகர்கள்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்டத்தின் உச்ச படைப்பான ‘பாகுபலி 2’ சமீபத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ், ரானா டகுபதி, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படி ஒரு ஹாலிவுட்டிற்கு நிகரான படைப்பை ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவுலகிற்கே மேஜிக்காக நிகழ்த்தி காட்டிய பெருமை ராஜமௌலிக்கே சேரும்.

இப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்கங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி வாகை சூடி ஓடி வருவதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் கலெக்ஷன் கிங்காக கோடி கணக்கில் கல்லா கட்டி வருகிறது. படத்தை பார்த்த பல முன்னணி சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை அலியா பட் ‘பாகுபலி 2’வை பத்தி வெகுவாக புகழ்ந்து ஸ்டேட்டஸிட்டு இருந்தார். இதற்கு பதில் ஸ்டேட்டஸ்கள் ட்விட்டிய ரசிகர்களில் ஒருவர், தென்னிந்திய நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் ? என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு அலியா பட், பிரபாஸ் என கூறினார். மேலும், உங்களுக்கு பிரபாஸுடன் இணைந்து நடிக்க விருப்பமா ? என்று கேட்டதற்கு நிச்சயமா எனக்கு பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடி ஆட விருப்பமுள்ளது என பதில் ஸ்டேட்டஸ் தட்டி ‘ரிபெல் ஸ்டார்’ ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் அலியா. தற்போது, பிரபாஸ் – சுஜீத் கூட்டணியில் பரபரப்பாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஹிந்தி நடிகை கேத்ரினா கைஃப்பிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால், இந்த ட்விட்டர் பதிலால், ‘சாஹோ’விலையே அலியா பட்டின் ஆசை நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட், பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்