முகப்புபாலிவுட்

இந்திய உளவாளியாக அலியா பட் நடித்திருக்கும் 'ராஸி' பட டிரெய்லர்

  | April 10, 2018 14:39 IST
Raazi

துனுக்குகள்

  • ‘காலிங் செமத்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது
  • இதில் அலியா பட், விக்கி கௌஷல் ஜோடியாக நடித்துள்ளனர்
  • நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றது
எழுத்தாளர் ஹரிந்தர் சிக்கா எழுதிய ‘காலிங் செமத்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ‘ராஸி’. இதில் அலியா பட், விக்கி கௌஷல் ஜோடியாக நடித்துள்ளனர். மேக்னா குல்ஸர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்துள்ள இதற்கு ஜே,ஐ.படேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜங்லீ பிக்சர்ஸ் – தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. நேற்று வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, அலியா பட் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற மே 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்