முகப்புபாலிவுட்

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சன்

  | March 13, 2018 13:49 IST
Amitabh  Bachchan Films

துனுக்குகள்

  • இதில் அமிதாப் பச்சனுடன் அமீர் கான், கத்ரினா கைஃப் ஆகியோர் நடிக்கின்றனர்
  • ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது
  • அமிதாப் பச்சன் திடீரென மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
பாலிவுட்டில் ராம் கோபால் வர்மாவின் ‘சர்கார் 3’ படத்திற்கு பிறகு அமிதாப் பச்சன் கைவசம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’, ‘102 நாட் அவுட்’ மற்றும் தெலுங்கில் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படம் ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் ஏ தக்’ என்ற நாவலை தழுவி எடுத்து வருகின்றனர்.

விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இதில் அமிதாப் பச்சனுடன் அமீர் கான், கத்ரினா கைஃப் ஆகியோர் நடிக்கின்றனர். ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் ஷூட்டிங் ஜோத்பூரில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 13-ஆம் தேதி) படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன் திடீரென மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்