விளம்பரம்
முகப்புபாலிவுட்

26 வருடங்களுக்குப் பிறகு அமிதாப் - ரிஷி கபூர் இணைந்து நடிக்கும் '102 நாட் அவுட்' டீஸர்

  | February 10, 2018 11:47 IST
102 Not Out Teaser

துனுக்குகள்

  • அமிதாப் பச்சன் கைசவம் 2 படங்கள் உள்ளது
  • கதைக்களம் குஜராத்தி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
  • இப்படத்தின் டீஸர் எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டியுள்ளது
பாலிவுட்டில் ராம் கோபால் வர்மாவின் ‘சர்கார் 3’ படத்திற்கு பிறகு அமிதாப் பச்சன் கைவசம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ மற்றும் ‘102 நாட் அவுட்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘102 நாட் அவுட்’ படத்தை ‘ஓ மை காட்’ புகழ் உமேஷ் சுக்லா இயக்கி வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் கிட்டத்திட்ட 26 வருடங்களுக்கு பிறகு கைகோர்த்துள்ளார் ரிஷி கபூர்.

இவர்கள் ‘அமர் அக்பர் ஆண்டனி, கபீ கபீ, நசீப், கூலி’ போன்ற படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன் 102 வயதான தந்தையாகவும், ரிஷி கபூர் அவருக்கு 75 வயதான மகனாகவும் வலம் வரவுள்ளனர். இதன் கதைக்களம் ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
 

தற்போது, அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தை இந்தாண்டு (2018) மே மாதம் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்