முகப்புபாலிவுட்

‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் 2’வில் 2 ஹீரோயின்ஸுடன் டூயட் ஆடப்போகும் டைகர் ஷெராஃப்

  | April 12, 2018 10:11 IST
Tiger Shroff

துனுக்குகள்

  • இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தின் ஷூட்டிங் துவங்கியது
  • இப்படத்தை இந்தாண்டு நவம்பர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
பாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு கரன் ஜோஹர் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், அலியா பட் நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக டைகர் ஷெராஃப் நடிக்கிறார்.

இதனை புனித் மல்ஹோத்ரா இயக்குகிறார். முதல் பாகத்தை இயக்கிய கரன் ஜோஹரின் ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், படத்தில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக அனன்யா பாண்டே, தாரா சுடரியா என 2 ஹீரோயின்ஸ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை டைகர் ஷெராஃப்பே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, புதிய போஸ்டரையும் ஷேரிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை இந்தாண்டு (2018) நவம்பர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்