முகப்புபாலிவுட்

‘மேடம் டூஸாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச்சிலை

  | November 20, 2018 11:13 IST
Anushka Sharama

துனுக்குகள்

  • ‘ரப் நே பனா தி ஜோடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா
  • தற்போது, அனுஷ்கா ஷர்மா கைவசம் ஷாருக்கானின் ‘ஜீரோ’ படம் உள்ளது
  • இவருக்கு ‘மேடம் டூஸாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள
ஷாருக்கானின் ‘ரப் நே பனா தி ஜோடி' படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. இதனையடுத்து ‘பேன்ட் பாஜா பாரத், ஜப் தக் ஹை ஜான், PK, NH10, தில் தடக்னே தோ, சுல்தான், ஏ தில் ஹை முஷ்கில்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு (2017) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனுஷ்கா ஷர்மா. கடைசியாக அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான படம் ‘சுய் தாகா – மேட் இன் இந்தியா'.

தற்போது, அனுஷ்கா ஷர்மா கைவசம் ஷாருக்கானின் ‘ஜீரோ' படம் உள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் டூஸாட்ஸ்' என்ற அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அனுஷ்கா ஷர்மாவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்