முகப்புபாலிவுட்

மே மாதம் ரிலீஸாகும் அர்ஜுன் கபூரின் ‘இந்தியா’ஸ் மோஸ்ட் வான்டட்’

  | September 03, 2018 14:08 IST
Indias Most Wanted

துனுக்குகள்

  • அர்ஜுன் கபூர் கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • இப்படத்துக்கு ‘இந்தியா’ஸ் மோஸ்ட் வான்டட்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
பாலிவுட்டில் அனீஸ் பஸ்மியின் ‘முபாரகன்’ படத்துக்கு பிறகு நடிகர் அர்ஜுன் கபூர் கைவசம் விபுல் அம்ருதுள் ஷாவின் ‘நமஸ்தே இங்கிலாந்த்’, திபாகர் பேனர்ஜியின் ‘சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்’, ராஜ்குமார் குப்தாவின் ‘இந்தியா’ஸ் மோஸ்ட் வான்டட்’, அஷுடோஷ் கோவரிகரின் ‘பானிபட்’ ஆகிய நான்கு படங்கள் உள்ளது.

இதில் ‘இந்தியா’ஸ் மோஸ்ட் வான்டட்’ படத்துக்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் – ராப்சிக் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், அர்ஜுன் கபூர் தனது கேரக்டர் (பிரபாத்) லுக் ஸ்டில்ஸை ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் டீசர், ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்