முகப்புபாலிவுட்

அஷுடோஷ் கோவரிகரின் 'பானிபட்' படத்திற்கு இசையமைக்கும் பிரதர்ஸ்

  | May 10, 2018 14:54 IST
Director Ashutosh Gowariker

துனுக்குகள்

  • மூன்றாவது பானிபட் போரை மைய்யப்படுத்தி இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்
  • இதில் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், க்ரித்தி சனோன் நடிக்கவுள்ளனர்
  • இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் 6-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
பிரபல பாலிவுட் இயக்குநர் அஷுடோஷ் கோவரிகர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘பானிபட்’. மூன்றாவது பானிபட் போரை மைய்யப்படுத்தி இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், க்ரித்தி சனோன் மிக முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

‘விஷன் வேர்ல்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் அஷுடோஷ் கோவரிகரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அஷுடோஷ் கோவரிகர் புரொடக்ஷன்ஸ்’ மூலம் பிராம்மண்டாமாக தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் ஷூட்டிங்கை துவங்கவுள்ளனர். இந்நிலையில், படத்திற்கு இசையமைக்க அஜய் – அதுல் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்