விளம்பரம்
முகப்புபாலிவுட்

தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் பங்கேற்பாளர்

  | October 10, 2017 13:13 IST
Bigg Boss

துனுக்குகள்

  • பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது
  • இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார் நடிகர் சல்மான் கான்
  • ஜுபைர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக 12 பொதுமக்களும்,ஆறு திரை உலக பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டிற்கு உள்ளே பங்கேற்பாளர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டிலிருந்து ஜுபைர் கான் என்பவர் சக பங்கேற்பாளர்களை கெட்ட வார்த்தையில் பேசி உள்ளார். இதனால் கடும் கோபமான நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் சல்மான் கான், ஜுபைர் கானை கடுமையாக பேசினார். இதனை எதிர்பார்க்காத பங்கேற்பாளர்கள் ஜுபைர் கான், பல கோடி பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் தன்னை திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாமல் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஜுபைர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டில் இருந்து ஜுபைர் கான் வெளியேற்றப்படுவதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் சல்மான் கான்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்