முகப்புபாலிவுட்

தீபிகா படுகோனின் ‘பத்மாவத்’ புதிய ரிலீஸ் தேதி

  | January 09, 2018 12:05 IST
Padmavat

துனுக்குகள்

  • பத்மாவதியின் வரலாற்றை மைய்யப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது
  • பல எதிர்ப்புகள் கிளம்பியதால் ரிலீஸாகவிருந்த படம் ஒத்தி வைக்கப்பட்டது
  • இப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் வெளியாகாதாம்
பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரெடியாகியுள்ள படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்துள்ள இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘VIACOM18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட கேரக்டர் போஸ்டர்ஸ், பாடல்கள் மற்றும் விஷுவல் ட்ரீட்டான டிரையிலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மைய்யப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீஸாகவிருந்த படம் ஒத்தி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தை வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்