விளம்பரம்
முகப்புபாலிவுட்

‘பாகுபலி’யைத் தொடர்ந்து சின்னத்திரையில் ‘தேவசேனா’ ராஜ்ஜியம்

  | May 05, 2017 19:08 IST
Celebrities

துனுக்குகள்

  • ‘வா டீல்’ வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது
  • ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் கதை - திரைக்கதை எழுதியுள்ளார்
  • ‘தேவசேனா’ என்றாலே ‘பாகுபலி’ அனுஷ்கா கதாபாத்திரம் தான் நினைவிற்கு வரும்
தெலுங்கில் ‘ஜோஷ்’, தமிழில் ‘கோ’ படங்களின் மூலம் ஹீரோயினாக என்ட்ரியானவர் கார்த்திகா. இதனையடுத்து சில தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் எஸ்.பி.ஜனநாதனின் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, மெகா பட்ஜெட் ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்திகா.

ஆனால், இது திரைப்படம் இல்லையாம். ஹிந்தியில் தயாராகிவரும் பிரம்மாண்டமான சீரியலாம். இதற்கு ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் கதை - திரைக்கதை எழுதியுள்ளார். ‘ஆரம்ப்’ என டைட்டிலிட்டுள்ள இந்த சீரியலில், கார்த்திகா இளவரசி தேவசேனாவாக வலம் வரவுள்ளாராம். ‘தேவசேனா’ என்றாலே ‘பாகுபலி’யில் வரும் அனுஷ்கா கேரக்டர் தான் நம் நினைவிற்கு வரும்.

கோல்டி பெஹ்ல் என்பவர் இயக்கிவரும் ‘ஆரம்ப்’-யில் வரும் தேவசேனாவிற்கும், ‘பாகுபலி’யில் வரும் அந்த கேரக்டருக்கும் சம்பந்தம் இல்லையாம். இதில் வரும் ‘தேவசேனா’ கதாபாத்திரம் திராவிட கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டதாம். இதற்காக பல சண்டைப் பயிற்சிகளும் கற்றுக் கொண்டாராம் கார்த்திகா. கார்த்திகா அருண் விஜய்யோடு டூயட் பாடி ஆடிய ‘வா டீல்’ நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்