முகப்புபாலிவுட்

இந்தியில் துல்கர் சல்மான் அறிமுகமாகும் 'கர்வான்' பட ஃபர்ஸ்ட் லுக்

  | May 15, 2018 13:11 IST
Dulquer Salmaan Karwaan

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளார்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
‘மகாநதி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்தி படம் ‘கர்வான்’ (KARWAAN). இப்படத்தை அகர்ஷ் ஹூரானா (AKARSH KHURANA) என்பவர் இயக்கி வருகிறார். இது தான் துல்கர் சல்மான் பாலிவுட்டில் என்ட்ரியாகும் முதல் படமாம். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘RSVP மூவீஸ் – ISHKA ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. தற்போது, துல்கர் சல்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
 
இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை இந்தாண்டு (2018) ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்