முகப்புபாலிவுட்

ரன்வீர், தீபிகா வரவேற்பு நிகழ்ச்சியில் பிரசென்டான முன்னாள் காதலி, ஆப்சென்டான முன்னாள் காதலர்

  | December 04, 2018 15:10 IST
Deepika Padukone

துனுக்குகள்

  • ரன்வீர், தீபிகா சேர்ந்து நடித்த 3 படங்களும் சூப்பர் ஹிட்
  • ரன்வீரும், தீபிகாவும் கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்
  • பெங்களூர் மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
பாலிவுட்டில் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா', ‘பாஜிராவ் மஸ்தானி' ஆகிய படங்களுக்கு பிறகு, ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் இணைந்து நடித்த படம் ‘பத்மாவத்'. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இப்படம் இந்த ஆண்டு (2018) வெளியாகி ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்ட காலமாக காதலித்து வந்த ரன்வீரும், தீபிகாவும் கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பெங்களூர் மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மும்பையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ரன்வீர் சிங்கின் முன்னாள் காதலி அனுஷ்கா ஷர்மா வந்திருந்தார். ஆனால், தீபிகா படுகோனின் முன்னாள் காதலர் ரன்பீர் கபூர் வரவில்லையாம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்