இவரின் வாழ்க்கை பயோ பிக் ஆக இந்தியில் தயாராகிறது. மலாலா தன் பகுதியில் நிலவிய தாலீபான்களின் அடக்குமுறையை பிபிசி உருது வலைதளத்தில் 'குல் மகாய்' என்கிற பெயரில் எழுதினார். இந்தப் பெயரே படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மலாலாவின் ஆரம்ப நாட்கள், அவர் சந்தித்த அடக்குமுறை பற்றியும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது பற்றியும் பேச இருக்கிறது இப்படம். இதில் மலாலாவாக பிரபல டிவி நடிகை ரீமா ஷாய்க் நடிக்கிறார். அம்ஜத் கான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.