முகப்புபாலிவுட்

ஹாலிவுட்டில் ரீமேக்காகவுள்ள ஹ்ரித்திக் ரோஷன் படம்

  | July 19, 2017 15:46 IST
Kaabil Movie Remake

துனுக்குகள்

  • ஹிந்தி, தமிழ் & தெலுங்கில் ‘காபில்’ வெளியானது
  • இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இதனை ரீமேக்கவுள்ளது
ஹிந்தியில் இந்த ஆண்டு (2017) தொடக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ரிலீஸான படம் ‘காபில்’. சஞ்சய் குப்தா இயக்கியிருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘பலம்’ என்ற பெயரில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லரான இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக யாமி கெளதம் டூயட் பாடி ஆடியிருந்தார். ராஜேஷ் ரோஷன் இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி – அயனன்கா போஸ் இணைந்து ஒளிப்பதிவு செய்திருந்தனர். ‘ஃபிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

தற்போது, இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக்க ‘20TH CENTURY FOX’ நிறுவனம் ‘காபில்’ டீமை அணுகியுள்ளது. இது குறித்து இயக்குநர் சஞ்சய் குப்தா கூறுகையில், ஆம்.. மீடியாக்களில் வெளியாகியுள்ள இந்த செய்தி முற்றிலும் உண்மைதான். ஃபாக்ஸ் நிறுவனம் எங்களிடம் ரீமேக் ரைட்ஸை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வெகு விரைவில் ‘காபில்’ ஹாலிவுட்டில் ரீமேக்காக அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்