முகப்புபாலிவுட்

ஹ்ரித்திக் ரோஷனின் `சூப்பர் 30' லுக்

  | February 06, 2018 17:28 IST
Hrithik  Roshan

துனுக்குகள்

  • கணிதவியலாளர் `சூப்பர் 30' ஆனந்த் குமார் வாழ்க்கை படமாகிறது
  • இதில் ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்கிறார்
  • படத்தை விகாஷ் பால் இயக்குகிறார்
சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடித்த 'காபில்' படத்திற்குப் பிறகு ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் படம் `சூப்பர் 30'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் இன்றிலிருந்து துவங்குகிறது.
 
`சூப்பர் 30' என்கிற திட்டத்தின் மூலம் பீகாரின் மிக ஏழ்மையான முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்துவரும் ஆனந்த் குமார் என்பவரைப் பற்றிய பயோபிக் ஆக உருவாகிறது இப்படம். இதில் ஆனந்த் குமாராக நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷனின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

`சில்லர் பார்ட்டி', `குயின்', `ஷான்டார்' ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் பால் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் ஹீரோயினாக யாரை நடிக்க வைப்பது என்ற ஆலோசனைகளுக்கு நடுவே படப்பிடிப்பு வேகமாக நடந்தி வருகிறதாம். 2019, ஜனவரி 25ல் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்