முகப்புபாலிவுட்

கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் பயோ பிக்கான ‘சூப்பர் 30’ ஃபர்ஸ்ட் லுக்

  | September 05, 2018 15:00 IST
கணிதவியலாளர் ஆனந்த் குமாரின் பயோ பிக் ஹிந்தியில் உருவாகி வருகிறது. இதில் ஆனந்த் குமார் கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார். இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் விரேந்திரா சேக்சேனா, மிருணாள் தாகூர் நடிக்கின்றனர்.

அஜய்-அதுல் இசையமைத்து வரும் இதற்கு அனய் கோசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘நடியட்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் – பேன்தோம் ஃபிலிம்ஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
 
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ஹ்ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்