முகப்புபாலிவுட்

ஜெய்பூர் தெருக்களில் அப்பளம் விற்கும் ஹ்ரித்திக் ரோஷன்

  | February 21, 2018 12:34 IST
Hrithik  Roshan

துனுக்குகள்

  • கணிதவியலாளர் `சூப்பர் 30' ஆனந்த் குமார் வாழ்க்கை படமாகிறது
  • இதில் ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்கிறார்
  • படத்தை விகாஷ் பால் இயக்குகிறார்
சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடித்த 'காபில்' படத்திற்குப் பிறகு ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் படம் `சூப்பர் 30'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்பூரில் நடந்து வருகிறது.

`சூப்பர் 30' என்கிற திட்டத்தின் மூலம் பீகாரின் மிக ஏழ்மையான முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்துவரும் ஆனந்த் குமார் என்பவரைப் பற்றிய பயோபிக்காக உருவாகிறது இப்படம். இதில் ஆனந்த் குமாராக நடிக்கும் ஹ்ரித்திக் ரோஷனின் மற்றுமொரு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் சைக்கிளில் அப்பளக் கூடையுடன் இருப்பது போன்ற படம் லீக் ஆகியிருக்கிறது.

`சில்லர் பார்ட்டி', `குயின்', `ஷான்டார்' ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் பால் இப்படத்தை இயக்குகிறார். படத்தை நவம்பர், அல்லது ஜனவரியில்  ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்