முகப்புபாலிவுட்

கட்டப்பா கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் வேஸ்ட் சர்சையை கிளைப்பும் பாலிவுட் நடிகர்

  | July 06, 2017 16:18 IST
Celebrities

துனுக்குகள்

  • கட்டப்பா கதாபாத்திரமும் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது
  • சத்யராஜின் நடிப்பை கடுமையாக விமர்சிக்கும் வகையில் கூறியுள்ளார்
  • கட்டப்பா கதாபாத்திரம் கிடைத்திருந்தால் அவரை விட நன்றாக நடித்திருப்பேன்
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. இதில் நடிகர் சத்யராஜ் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரத்திற்கு அடுத்தப்படியாக சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரமும் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரபல பாலிவுட் திரைப்பட வில்லன் குல்சன் குரோவர் என்பவர் பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜை குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார்.

அவர் கூறிய அந்த கருத்தில் சத்யராஜின் நடிப்பை கடுமையாக விமர்சிக்கும் வகையில் கூறியுள்ளார் பாகுபலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நான் அவரை விட மிகவும் நன்றாக நடித்துக்கொடுத்திருப்பேன்.

அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான அணைத்து தகுதிகளும் என்னிடம் மட்டும் தான் உள்ளது. நடிகர் சத்யராஜ் ஒரளவுக்கு தான் அவரது திறமை வெளிக்காட்டியுள்ளார். தனது இந்த கருத்தை இதற்கு முன்னதாகவே இயக்குநர் ராஜமவுலிவிடம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.
குல்சன் குரோவரின் இந்த கருத்து நடிகர் சத்யராஜ் நடிப்பை விமர்சிக்கும் வகையில் உள்ளதால் அணைத்து திரைப்பட உலகினர் மத்தியிலும் இவரது கருத்து பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்