முகப்புபாலிவுட்

மேடம் டுஸாட்டில் பாலிவுட் அனார்கலிக்கு மெழுகு சிலை

  | August 12, 2017 16:03 IST
Celebrities

துனுக்குகள்

  • சமீபத்தில் திறக்கப்பட்டது மேடம் டுஸாட்ஸ் மெழுகுபொம்மை அருங்காட்சியகம்
  • மதுபாலா இந்திய திரையுலகின் மர்லின் மன்றோ என்று வருணிக்கப்பட்டவர்
  • அனார்கலி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது
புது டெல்லியில் அமைந்துள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகுபொம்மை அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை மதுபாலாவின் உருவ பொம்மை இடம்பெற்றுள்ளது. நடிகை மதுபாலா இந்திய திரையுலகின் மர்லின் மன்றோ என்றும், காதல் தேவதை என்றும் கனவு கன்னி என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

மது பாலாவின் சிலையை டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு அவரின் சிலை, அவருடைய சகோதரி மதுர் ப்ரிஜி புஷன் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள மெழுகுச்சிலை முகல்-ஏ-ஆசம் என்ற திரைப்படத்தில் மதுபாலா ஏற்று நடித்த அனார்கலி கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்