முகப்புபாலிவுட்

ரன்வீர் சிங் படத்துக்காக உருது கற்கும் ஜான்வி கபூர்

  | December 05, 2018 11:10 IST
Janvhi Kapoor

துனுக்குகள்

  • மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமான முதல் படம் ‘தடக்’
  • ஜான்வி கபூர் ‘டக்த்’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்
  • பீரியட் படமான இதனை ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘தடக்' (ஹிந்தி). இந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் வெளியான இப்படம் மராத்தியில் ஹிட்டான ‘சைரத்' படத்தின் ரீமேக்காம். இந்த படத்தை சஷாங் கைத்தான் இயக்கியிருந்தார்.

இதனையடுத்து ஜான்வி கபூர் ‘டக்த்' என்ற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். கரண் ஜோஹர் இயக்கவுள்ள இதில் ரன்வீர் சிங், கரீனா கபூர், விக்கி கௌஷல், பூமி பெட்நேகர், அணில் கபூர் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

பீரியட் படமான இதனை ‘தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு ஹுசைன் ஹைத்ரி, சுமித் ராய் இணைந்து வசனம் எழுதி வருகின்றனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகை ஜான்வி கபூர் உருது மொழி கற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்