முகப்புபாலிவுட்

ஷூட்டிங்கிற்கு திரும்பிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

  | March 09, 2018 16:05 IST
Dhadak

துனுக்குகள்

  • இஷானுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்
  • ஸ்ரீதேவி மரணமடைந்ததால் ‘தடக்’ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது
  • இப்படத்தை ஜூலை 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
2016-ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான படம் ‘சைரத்’. நாகராஜ் மஞ்சுளே இயக்கியிருந்த இப்படம் அங்கு மெகா ஹிட்டானது. இதன் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜான்வி கபூர் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். ‘தடக்’ (DHADAK) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த ரீமேக்கில், ஹீரோவாக நடிகர் ஷாஹித் கபூரின் சகோதரர் இஷான் நடிக்கிறார்.

இதனை சஷாங் கைத்தான் இயக்கி வருகிறார். ‘தர்மா புரொடக்ஷன்ஸ் – ஜீ ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஏற்கனவே, படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

படத்தை இந்தாண்டு (2018) ஜூலை 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில், நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்ததால் ‘தடக்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, நேற்று (மார்ச் 8-ஆம் தேதி) முதல் மீண்டும் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செடியூலில் ஜான்வி கபூரும் கலந்து கொண்டாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்