முகப்புபாலிவுட்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகும் `தடக்' பட டிரெய்லர்

  | June 11, 2018 13:40 IST
Dhadak

துனுக்குகள்

  • இஷான் - ஜான்வி நடித்திருக்கும் படம் `தடக்'
  • இது மராத்தி படமான `சைராத்' பட ரீமேக்
  • இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016ல் வெளியான மராத்தி படம் `சைராத்'. இப்படம் இந்தியில் `தடக்' என்கிற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. இப்படம் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமாகிறார். ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.

`ஹம்டி சர்மா கி துல்ஹனியா', `பத்ரிநாத் கி துல்ஹனியா' ஆகிய படங்களை இயக்கிய ஷஷாங்க் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரிஜினலுக்கு இசையமைத்த அஜய் - அதுல் தான் இப்படத்துக்கும் இசை. இயக்குநர் கரண் ஜோகன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

 

தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே பஞ்சாபி, கன்னடா, ஓடியா ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கூடவே ஸ்ரீதேவியின் வாரிசு அறிமுகமாகும் படம் என்பதாலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படம் ஜூலை 20ம் தேதி வெளியாகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்