முகப்புபாலிவுட்

என்னுடைய முதல் ஹிந்தி படம் கிரிக்கெட்- நெகிழ்ச்சியாக பேசும் நடிகர் ஜீவா!

  | January 16, 2019 11:09 IST
Jiiva

துனுக்குகள்

  • ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிப்சி' படத்தில் நடித்திருக்கிறார்
  • இவர் நடித்த 'சிவா மனசுல சக்தி' நல்ல வரவேற்பை பெற்றது
  • தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார்
2003ம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜீவா.  இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகிய ‘ராம்' திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களை நோக்கி அவரது திரைப்பயணம் தொடர்ந்தது.
 
சமீபத்தில்  சங்கிலி புங்கிலி, கலகலப்பு 2 ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜிப்சி' படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் இந்தியில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்கிற தகவல் வந்தது. இப்போது அதை அவர் உறுதி செய்துள்ளார்.
 
தனியார் பத்திரிக்கை ஒன்றிற்க்கு பேட்டி அளித்த நடிகர் ஜீவா,

“தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக  'SGF 90' படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க படபிடிப்பு விறு விறுப்பாக  சென்றுக்கொண்டிருக்கிறது. பட டைட்டில் கூடிய சீக்கிரம் வெளியிடப்படும்.
 
இந்தியில் "1983 வேர்ல்ட் கப் " என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீனில் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியதோ அதுபோல் இந்த படமும் இருக்கும்.
 
100 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கின்ற படம் இது. கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று. நிறைய போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்தி படமே கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
1983ல் இந்தியா வேர்ல்ட் கப் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம். கிட்டத்த 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடைபெறவுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த நல்ல கிரிக்கெட்டர்  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். நான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றது எனக்கு பெருமை தானே.
 
தமிழ் நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் நான்கு பேர் தான். அந்த கேரக்டர் எனக்கு கிடைத்தது பெருமையான விஷயம் . மே மாதம் லண்டனில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. லகான், M.S.தோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது” என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்