முகப்புபாலிவுட்

கிரிக்கெட் பிளேயர் ஆகிறார் நடிகர் ஜீவா!

  | January 08, 2019 15:51 IST
1983

துனுக்குகள்

  • ராஜு முருகன் இயக்கத்தில் "ஜிப்ஸி" படத்தில் நடித்திருக்கிறார்
  • கிரிகெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்
  • 1983-ம் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது படமாகிறது
இந்தியாவில் எத்தனையோ விளையாட்டு போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட் போட்டிக்குத்தான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம்.  ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிகெட் போட்டி நடக்கும் போதும் வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு டிவி முன்பு கிரிக்கெட் பார்க்கும் மன நிலையை பெற்ற நம் மக்களுக்கு கிரிக்கெட் போட்டியை மய்யமாக வைத்து படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிதான்.
 
இந்த யுக்தியை கையில் எடுத்து 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது, அதை நாடே கொண்டாடியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘1983' என்ற தலைப்பில் இந்தியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
 
கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. முதலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.
 
ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய இயக்குனர் கபீர் கான் நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக ஜீவா தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்