விளம்பரம்
முகப்புபாலிவுட்

ராய் லக்ஷ்மியின் ‘ஜூலி 2’ சென்சார் ரிசல்ட்

  | September 12, 2017 12:25 IST
Julie 2 Trailer

துனுக்குகள்

  • பாலிவுட்டில் ‘ஜூலி’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • ராய் லக்ஷ்மி ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • இப்படத்தை தமிழ் & தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனர்
பாலிவுட்டில் தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‘ஜூலி’. தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதனையும் தீபக் ஷிவ்தாசனியே இயக்கியுள்ளார். ‘ஜூலி 2’-வில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இது ராய் லக்ஷ்மி ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்.

விஜூ ஷா, ரூ பேண்ட், அடிஃப் அலி, ஜாவேத் – மோஷின் ஆகியோர் இசையமைத்துள்ள இதற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கீதா டிரேடிங் கம்பெனி’ மற்றும் ‘ட்ரயம்ப் டாக்கீஸ் எல்.எல்.பி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர் & டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் படத்தின் ஹிந்தி வெர்ஷனை பார்த்த சென்சார் குழுவினர், எந்தவித கட்டுமின்றி ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை 3 மொழிகளிலும் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்