முகப்புபாலிவுட்

கபடி வீராங்கனையாக நடிக்கும் கங்கனா ரனாவத்

  | June 11, 2018 14:47 IST
Kangana Ranaut

துனுக்குகள்

  • ராணி லக்ஷ்மி பாய் பயோ பிக்கில் நடிக்கிறார் கங்கனா
  • இதையடுத்து கபடி வீராங்கனையாக நடிக்கிறார்
  • அப்படத்தை இயக்குகிறார் அஸ்வினி திவாரி
கங்கனா ரனாவத் நடிப்பில் `மென்டல் ஹே க்யா' படம் ரிலீஸுக்கு தயாராகிவருகிறது. தற்போது க்ரிஷ் இயக்கத்தில், ராணி லட்சுமி பாயின் பயோபிக்கான `மனிகர்னிகா: த குயின் ஆஃப் ஜான்ஸி' படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து நடிக்கும் படத்தையும் தேர்வு செய்திருக்கிறார் கங்கனா.

தமிழில் `அம்மா கணக்கு', இந்தியில் `நில் பேட்டி சன்னாட்டா', `பார்லி கி தாஃப்ரி' ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இவர் இயக்கும் அடுத்த படத்தில்தான் நடிக்கிறார் கங்கனா. இப்படத்தில் கங்கனா ஒரு கபடி வீங்கனையாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக இப்போதே தயாராகிவருகிறாராம்.

இப்படத்திற்காக அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கங்கனா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்