விளம்பரம்
முகப்புபாலிவுட்

ஆன்லைனில் வைரலாகி வரும் கியூட் ‘சிம்ரன்’

  | May 15, 2017 13:24 IST
Movies

துனுக்குகள்

  • கங்கனா ரனாவத் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • கதைக்களம் உண்மை க்ரைம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாம்
  • கங்கனாவின் கியூட் ரியாக்ஷன்ஸ் லைக்ஸ் போட வைக்கிறது
பாலிவுட்டில் ‘ரங்கூன்’ படத்திற்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத் நடித்த படம் ‘சிம்ரன்’. தற்போது, க்ரிஷ் இயக்கி வரும் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மணிக்கர்ணிகா’ படத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார் கங்கனா. இதில் ‘சிம்ரன்’ படத்தை ‘ஷாஹித், சிட்டி லைட்ஸ், அலிகார்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஹன்சல் மேத்தா இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

படத்தின் டைட்டில் கேரக்டரில் கங்கனா நடித்து வரும் இதன் கதைக்களம் ஒரு உண்மை க்ரைம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம். கங்கனாவுடன் சோஹம் ஷா, ரூபந்தர் நாகரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘டி-சீரீஸ் பிலிம்ஸ்’வுடன் இணைந்து ‘ஆதர்ஷ் டெலிமீடியா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் நேற்று நள்ளிரவு படக்குழுவால் ட்விட்டப்பட்டது.

இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரல் ட்ரெண்டு அடித்து வருவதோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஷார்ப்பாக 1 நிமிடம் ஓடும் டீசரில் வசனங்களே இல்லை. ஆனால், கங்கனாவின் கியூட் ரியாக்ஷன்ஸ் லைக்ஸ் போட வைக்கிறது. படத்தை செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. விரைவில் டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்விட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்