விளம்பரம்
முகப்புபாலிவுட்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘சிம்ரன்’ டிரையிலர்

  | August 09, 2017 22:01 IST
Simran Trailer

துனுக்குகள்

  • கங்கனா ரனாவத் கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இதன் கதைக்களம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாம்
  • டீஸரில் கங்கனாவின் கியூட் ரியாக்ஷன்ஸ் லைக்ஸ் போட வைத்தது
பாலிவுட்டில் ‘ரங்கூன்’ படத்திற்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத் கைவசம் ஹன்சல் மேத்தாவின் ‘சிம்ரன்’ மற்றும் கிரீஷ்ஷின் ‘மணிக்கர்ணிகா’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மணிக்கர்ணிகா’வின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘சிம்ரன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

படத்தின் டைட்டில் (சிம்ரன்) கேரக்டரில் கங்கனா நடித்து வரும் இதன் கதைக்களம் ஒரு உண்மை க்ரைம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம். கங்கனாவுடன் சோஹம் ஷா, ரூபந்தர் நாகரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘டி-சீரீஸ் ஃபிலிம்ஸ்’வுடன் இணைந்து ‘ஆதர்ஷ் டெலிமீடியா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடந்துள்ளது. ஏற்கெனவே, வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, இயக்குநர் ஹன்சல் மேத்தா தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்