முகப்புபாலிவுட்

வெளியானது சன்னி லியோன் பயோ பிக்கான 'கரேன்ஜிட் கவுர்' டிரெய்லர்

  | July 06, 2018 17:06 IST
Sunny Leone Biopic

துனுக்குகள்

  • கவர்ச்சிப் பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன்
  • இப்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்
  • இவரைப் பற்றிய பயோபிக் தயாராகியுள்ளது
கவர்ச்சிப் பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் அந்தப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதை துவங்கினார். ஜெய் நடித்த `வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் திரையிலும் அறிமுகமானார். தற்போது வடிவுடையான் இயக்கும் `வீரமாதேவி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தற்போது இவரைப் பற்றிய பயோ பிக் தயாராகியிருக்கிறது. 'கரேன்ஜிட் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் கரேன்ஜித் கௌர் வோஹ்ரா எப்படி சன்னி லியோனாக மாறினார்? கன்னடாவில் இருந்து ஏன் வந்தார்? அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டது? போன்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் இருக்குமாம்.
 

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஜீ டி.வி தயாரித்திருக்கும் இப்படத்தை 'வில் யூ மேரி மீ', 'டேபிள் நம்பர் 21' போன்ற படங்களை இயக்கிய ஆதித்யா தத் இயக்கியிருக்கிறார். இது ஜீ தொலைக்காட்சியின் இணைய தளமான ஜீ5யில் ஜூலை 16ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்