முகப்புபாலிவுட்

5 மொழிகளில் உருவாகியுள்ள ராக்கிங் ஸ்டாரின் ‘கே.ஜி.எஃப்’ புதிய டிரெய்லர்

  | December 05, 2018 17:45 IST
Kgf

துனுக்குகள்

  • ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’
  • இதன் டீசர், டிரெய்லர் & சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்றது
  • 5 மொழிகளில் டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
கன்னடத்தில் ‘ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்'. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப் செய்துள்ளனர்.
 


தற்போது, இதன் புதிய டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை 5 மொழிகளிலும் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்