முகப்புபாலிவுட்

டிவி நிகழ்ச்சிக்காக இணையும் மாதவன் - கமல்ஹாசன்

  | September 10, 2018 13:53 IST (New Delhi)
R Madhavan

துனுக்குகள்

  • பல மொழிகளிலும் அங்கீகாரம் பெற்றவர் மாதவன்
  • பாலிவுட்டிலும் தனக்கென இடத்தை பெற்றிருப்பவர்
  • விரைவில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்

தமிழில் பல காலம் தனது சாக்லெட் பாய் இமேஜை தக்க வைத்திருந்தவர் மாதவன். `இறுதிச்சுற்று', `விக்ரம் வேதா' என இப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். தமிழ் போலவே பாலிவுட்டிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் மேடி.

தென்னிந்திய நடிகர்கள் இந்தி சினிமாவில் தங்களுக்கென இடத்தைப் பிடிப்பதில் சிரமம் உள்ளதா எனக் கேட்ட பொழுது "உங்களிடம் திறமையும், விடாமுயற்சியும் இருக்கும் பட்சத்தில் எந்த மொழி சினிமாவிலும் உங்களால் சாதிக்க முடியும். கடினமாக முயற்சி செய்தால், உங்களுக்கு ஏற்ற இடம் கண்டிப்பாக உருவாகும்" எனத் தெரிவித்துள்ளார். `ரங் தே பசந்தி', `3 இடியட்ஸ்', `தனு weds மனு' எனப் பல இந்தி படங்களில் நடித்து மாதவன் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy) on

 

தற்போது அடுத்ததாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார் மேடி. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் உத்வேகக் கதைகள் சொல்லப்பட இருக்கிறதாம். மாதவனின் சீனியர் நடிகர் கமல்ஹாசனும் இந்த நிகழ்வின் ஒரு எப்பிசோடில் வர இருக்கிறார். "நான் அவருடைய நடிப்பைப் பார்த்து வளர்ந்தவன். அவரது நடிப்பும் ஒரு மனிதராக அவர் நடந்து கொள்ளும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்த விஷயங்கள். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு 16 வயது சிறுவனின் மனநிலையுடன்தான் இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார் மாதவன். `அன்பே சிவம்', `மன்மதன் அம்பு' ஆகிய படங்களில் கமலுடன் மாதவன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்