முகப்புபாலிவுட்

சீரியலிலும் சிக்சர் அடிக்கும் மாதவன்

  | February 03, 2018 15:13 IST
Breathe Amazon Original Video

துனுக்குகள்

  • ஆன்லைன் சீரியலான 'ப்ரீத்' நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது
  • இதில் மாதவன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்
  • இதுவரை வெளியான ஐந்து எப்பிசோட்களும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது
தொலைக்காட்சி தொடர்கள் போல, ஆன்லைன் சீரியல்களும் பிரபலமாகி வருகிறது. பல திரைப்பிரபலங்களும் ஆன்லைன் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். விவேக் ஓபராய் நடித்து அமேசான் தளத்தில் வெளியான 'இன்சைட் எட்ச்' பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மாதவன் நடித்து ஒளிப்பரப்பாகி வரும் 'ப்ரீத்' சீரியலுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. மயன்க் ஷர்மா எழுதி இயக்கி இருக்கும் இந்த சீரியல், ஜனவரி 26ம் தேதி ஒளிப்பரப்பாகத் துவங்கியது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் மகனுக்காக சில கொலைகளை செய்யும் தந்தையாய் நடித்திருக்கிறார் மாதவன். இந்த விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர், பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது. மேலும் மாதவனின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
 
இதுவரை ஐந்து எப்பிசோட் வெளியாகியுள்ள இந்தத் சீரியலில், அமித் ஷத், சப்னா பாபி, நீனா குல்கர்னி, மாஸ்டர் அதர்வா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதன் அடுத்த மூன்று எப்பிசோடுகள், முறையே பிப்ரவரி 9, 16, 23 ஆகிய தேதிகளில் வெளியாகி முதல் சீசன் நிறைவடைகிறது. அதன் பின் இரண்டாவது சீசனுக்கான விவரங்கள் வெளிவருமாம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்