முகப்புபாலிவுட்

பிரபாஸ் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

  | May 24, 2018 12:26 IST
Prabhas Saaho

துனுக்குகள்

  • இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் நடிக்கிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • சமீபத்தில், படத்தின் துபாய் ஷெடியூல் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதனையடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் பிரபாஸின் கேரியரில் 19-வது படமாம். இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லரான இதில் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், ‘கத்தி’ புகழ் நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா ஆகியோர் நடிக்கிறார்களாம். ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் மிரட்டலான மாஸ் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.
 
சமீபத்தில், படத்தின் துபாய் ஷெடியூல் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தற்போது, இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்