முகப்புபாலிவுட்

ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் கங்கனா – ‘மணிகர்ணிகா’ ஃபர்ஸ்ட் லுக் டீசர்

  | October 02, 2018 11:14 IST
Manikarnika

துனுக்குகள்

  • ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமான இதனை க்ரிஷ் இயக்கி வருகிறார்
  • ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்
  • இப்படத்தை ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலிவுட்டில் ஹன்சல் மேஹ்தாவின் ‘சிம்ரன்’ படத்திற்கு பிறகு கங்கனா ரனாவத் நடிக்கும் படம் ‘மணிகர்ணிகா’. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமான இதனை க்ரிஷ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கென கங்கனா பிரத்யேகமாக வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் கதை,திரைக்கதை எழுதியுள்ளார். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு ஞானசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், பாடல்கள் மற்றும் வசனங்களை பிரசூன் ஜோஷி எழுதியுள்ளாராம்.

 

‘ஜீ ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் ஜெயின் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்