முகப்புபாலிவுட்

அனுராக் காஷ்யப்பின் 'மன்மர்ஸியான்' டிரெய்லர்

  | August 09, 2018 12:26 IST
Manmarziyaan Abhishek Bachchan

துனுக்குகள்

  • இதில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக டாப்சி டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இந்த படத்தை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார்
  • படத்தை செப்டம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலிவுட்டில் ‘ஹவுஸ்ஃபுல் 3’ படத்திற்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மன்மர்ஸியான்’ (Manmarziyaan). இந்த படத்தை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். இதில் அபிஷேக் பச்சன், டாப்சி, விக்கி கௌஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் – ஈராஸ் இன்டர்நேஷனல் – பேண்டம் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.
 

தற்போது, படத்தின் டிரெய்லரை இயக்குநர் அனுராக் காஷ்யப் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்