விளம்பரம்
முகப்புபாலிவுட்

டோனியின் அடுத்த டார்கெட் பாலிவுட்

  | May 02, 2017 14:45 IST
Celebrities

துனுக்குகள்

  • இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி
  • டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது
  • அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது டோனி திரைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியை உலக வரலாற்று அரங்கில் பல்வேறு சாதனைகளை பெறச்செய்தவர் MSD என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் எம்.எஸ். டோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள், பிறகு அது பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமா உலகில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக நமக்கு கிடைத்த செய்திகள் கூறுகிறது. பாலிவுட் உலகின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி விளையாட்டு வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக சென்ற ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

இதில் நடிகர் வருண் தவான் ஹாக்கி வீரர் தியான் சந்த் வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் இப்படத்தை ரோஹித் வைத் என்பவர் இயக்குகிறார் என்றும் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் பணியை கிரிக்கெட் வீரர் டோனி பெற்று இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடன் இனைந்து கரண் ஜோஹரும் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்