முகப்புபாலிவுட்

கொலையா,தற்கொலையா விசாரணையின் பிடியில் பிரபல நடிகையின் கணவர்

  | January 08, 2019 14:05 IST
Nikita Dead

துனுக்குகள்

  • சோரி சோரி மனா சோரி படத்தில் நடித்தவர்
  • நிகிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது - திரையுலக பிரபலங்கள்
  • நிகிதாவின் உண்மையான பெயர் லக்ஷ்மி ப்ரியா பெஹரா
பாலிவுட்டில் சோரி சோரி மனா சோரி, ஸ்மைல் ப்ளீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த  லக்ஷ்மி ப்ரியா பெஹரா என்கிற நிகிதா. இவர் நடித்த படங்களின் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொண்டவர்.
 
அவர் மகாநதி விஹார் பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு கணவர் லிபன் சாஹுவுடன் சென்றார். ஏற்கனவே கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்கு வந்தும் இந்த பிரச்னை ஓயவில்லை. இருவரும் பேசி சமாதானம் ஆகிக்கொள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.
 
திடீரென நிகிதா அலறும் சப்தம் கேட்டு அவரது குடும்பத்தார் ஓடி வந்து பார்த்தபோது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவரின் கணவர் மாடியில் நின்று கொண்டிருந்தார். பலத்த காயங்களுடன் நிகிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக எஸ்.சி. பி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் உடல்நலம் மோசமானதையடுத்து மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
 
நிகிதாவை அவரது கணவர் லிபன் தான் கொலை செய்துவிட்டார் என்று அவரின் தந்தை சனதன் பெஹரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிகிதாவை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் கொடுமை படுத்தியதாக சனதன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
என் மகளை லிபன் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லிபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது . நிகிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்