விளம்பரம்
முகப்புபாலிவுட்

மீண்டும் தாக்கப்பட்ட பிரபல பாலிவுட் இயக்குநர்

  | March 16, 2017 17:40 IST
Movies

துனுக்குகள்

  • ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்கும் போது மர்ம கும்பலால் தாக்கப்பட்டது
  • ராஜ புத்திர இனத்தைச் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன
  • காவல் துறையின் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது
மகாராஷ்டிராவில் உள்ள பத்மாவதி திரைப்பட படப்பிடிப்புத் தளத்திற்கு தீ வைத்த மர்ம கும்பல் ஒன்று, அங்கிருந்த படக்குழுவினரையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகர் ரண்வீர் சிங், நடிகர் ஷாகித் கபூர், நடிகை தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பத்மாவதி என்ற வரலாற்றுத் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படம், முகாலய அரசன் அலாவுதீன் கில்ஜி என்பவர் ராஜபுத்திர ராணி பத்மாவதி மீது கொண்ட ஒரு தலை காதல், அவரை அடைவதற்காக, போர் செய்த வரலாற்றுப் பதிவை கதையாகக் கொண்டு படமாக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இப்படத்தை படமாக்க, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் பத்மாவதி படத்திற்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆனால், அங்கு திடீரென உள்ளே வந்த வன்முறையாளர்கள், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர்.
 
padmavati
padmavati

இதனையடுத்து, அங்கிருந்து படப்பிடிப்பு நிகழ்வுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள கோலாப்பூர் பகுதியில் இந்த படத்திற்காக, செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்த சூழ்நிலையில், உள்ளே வந்த வன்முறையாளர்கள், கற்கலை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். மேலும், படக்குழுவினரையும் கடுமையாக தாக்கிவிட்டு, தப்பியோடியுள்ளனர்.
இதில், பத்மாவதி திரைப்பட படப்பிடிப்புத் தளம் முழுவதும் தீ பற்றி எரிந்து சேதமடைந்ததுள்ளது. திரைப்படக்குழுவினர் சிலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை பற்றி காவல்துறை விசாரிக்கின்றனர் எனவும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்