முகப்புபாலிவுட்

பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி

  | December 05, 2018 17:19 IST
Priyanaka Chopra

துனுக்குகள்

  • பிரியங்கா சோப்ரா கைவசம் 2 படங்கள் உள்ளது
  • சமீபத்தில், பிரியங்காவிற்கும், நிக் ஜோனஸுக்கும் திருமணம் நடைபெற்றது
  • இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் நடந்தது
கோலிவுட்டில் 2002-ஆம் ஆண்டு ‘தளபதி' விஜய்யின் ‘தமிழன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் என்ட்ரியாகி பல படங்களில் நடித்தார். தற்போது, ஹிந்தியில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் களமிறங்கி அசத்தி வருகிறார்.

தற்போது, பிரியங்கா கைவசம் ஹிந்தியில் ஃபர்ஹான் அக்தரின் ‘தி ஸ்கை இஸ் பிங்க்' மற்றும் ஹாலிவுட்டில் க்ரிஸ் ப்ராட்டின் ‘கௌபாய் நிஞ்சா வைக்கிங்' என 2 படங்கள் உள்ளது. சமீபத்தில், பிரியங்கா சோப்ராவிற்கும், அவரது காதலர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் ஜோத்பூரில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் நடந்தது. இதில் பிரபல திரையுலக நட்சத்திரகள் கலந்து கொண்டனர். மேலும், பிரதமர் மோடி இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்