முகப்புபாலிவுட்

விரைவில் திரையில் பிரதமர் மோடி

  | January 06, 2019 21:19 IST
Pm Modi

துனுக்குகள்

  • ஏற்கனவே அரசியல் தலைவர்களின வாழ்கை வரலாறு திரைப்படமாவது வழக்கம்
  • இந்த படத்தை இயக்குநர் ஓமுங்குமார் தயாரிக்கிறார்
  • விவேக் ஓபராய் மோடி வேடத்தில் நடிக்கிறார்
வாழ்க்கையில் போராடி வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது  சினிமாத்துறைக்கு புதிதல்ல.
 
உலக நாடுகளிலும் கூட இந்த பழக்கம் உண்டு, மக்களால் போற்றப்பட்ட பல உலக தலைவர்களின் படம் பல மொழிகளில் இன்றளவும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
 
இந்திய சினிமாவிலும், அம்பேத்கர், பகத்சிங், பெரியார், காமராஜர், என வரிசைப்படுத்திக்கொண்டு போகலாம். இப்படி அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறது.
 
சமீபத்தில் இறந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு  படமாகிறது என்கிற அறிவிப்புகள் வந்தன. அதே போல் பால்தாக்ரேவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியும் வந்தன. இந்த இருவர்களின் பட்டியலைத் தொடர்ந்து தற்போது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த படத்தில் மோடி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. முன்னணி நடிகர்கள் பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராயை மோடி வேடத்தில் நடிக்கத் தேர்வு செய்துள்ளனர். இதனைப் படத்தின் இயக்குனர் ஓமுங்குமார், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்