முகப்புபாலிவுட்

நாளை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டியா?

  | August 17, 2018 15:51 IST
Priyanka Chopra Engagement Party

துனுக்குகள்

  • பிரியங்கா சோப்ரா கைவசம் 2 படங்கள் உள்ளது
  • பிரியங்காவுக்கும் நிக் ஜோனஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது
  • இவர்களது நிச்சயதார்த்த பார்ட்டி மும்பையில் நடக்கவிருக்கிறது
கோலிவுட்டில் 2002-ஆம் ஆண்டு ‘தளபதி’ விஜய்யின் ‘தமிழன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் என்ட்ரியாகி பல படங்களில் நடித்தார். தற்போது, ஹிந்தியில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் களமிறங்கி அசத்தி வருகிறார்.

சமீபத்தில், சல்மான் கானின் ‘பாரத்’ (ஹிந்தி) படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிரியங்கா, பின் விலகுவதாக அறிவித்தார். தற்போது, பிரியங்கா கைவசம் ஹிந்தியில் ஃபர்ஹான் அக்தரின் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ மற்றும் ஹாலிவுட்டில் க்ரிஸ் ப்ராட்டின் ‘கௌபாய் நிஞ்சா வைக்கிங்’ என 2 படங்கள் உள்ளது.

பிரியங்கா சோப்ராவிற்கும், அவரது காதலர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் சமீபத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. வெகு விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறதாம். இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 18-ஆம் தேதி) இவர்களது நிச்சயதார்த்த பார்ட்டி மும்பையில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேற்று இரவே நிக் ஜோனஸ் தனது குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்