முகப்புபாலிவுட்

திருமணத்திற்காக சல்மான்கான் படத்திலிருந்து விலகிய ப்ரியங்கா சோப்ரா

  | July 27, 2018 16:43 IST (New Delhi)
Priyanka Chopra

துனுக்குகள்

  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியிருந்தார்
  • பிரியங்காவுக்கும் நிக் ஜோனஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது

பாலிவுட்டில் ‘ரேஸ் 3’ படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

 

இந்த படத்தை ‘டி சீரீஸ் – ரீல் லைஃப் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏற்கெனவே, துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

முதலில், இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது, நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் பிரியங்கா சோப்ராவின் காதலர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ் தானாம். சமீபத்தில், இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. வெகு விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்