விளம்பரம்
முகப்புபாலிவுட்

ராய் லக்ஷ்மி பாலிவுட்டில் என்ட்ரியாகும் ‘ஜூலி 2’ டிரையிலர்

  | September 04, 2017 19:20 IST
Julie 2 Trailer

துனுக்குகள்

  • பாலிவுட்டில் ‘ஜூலி’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • ராய் லக்ஷ்மி ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • இப்படத்தை தமிழ் & தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனர்
பாலிவுட்டில் தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‘ஜூலி’. தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதனையும் தீபக் ஷிவ்தாசனியே இயக்கியுள்ளார். ‘ஜூலி 2’-வில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இது ராய் லக்ஷ்மி ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்.

விஜூ ஷா, ரூ பேண்ட், அடிஃப் அலி, ஜாவேத் – மோஷின் ஆகியோர் இசையமைத்துள்ள இதற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கீதா டிரேடிங் கம்பெனி’ மற்றும் ‘ட்ரயம்ப் டாக்கீஸ் எல்.எல்.பி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் & டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரையிலரை ராய் லக்ஷ்மி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை ஹிந்தி தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்