முகப்புபாலிவுட்

வெப்சீரிஸுக்காக இணைந்திருக்கும் பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள்

  | May 21, 2018 16:09 IST
Anurag Kashyap

துனுக்குகள்

  • முன்னணி இயக்குநர்கள் இணைந்து வெப்சீரிஸ் இயக்கியிருக்கிறார்கள்
  • இந்த சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ்தளத்தில் ஒளிப்பரப்பாக இருக்கிறது
  • இதில் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்
`இன்சைட் எட்ஜ்', `ப்ரீத்' என ஏற்கெனவே பாலிவுட் தீவிரமாக வெப்சீரிஸ் உருவாக்கத்தில் இறங்கிவிட்டது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் வெப்சீரிஸுக்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் இணைந்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோத்வானி இணைந்து `சாக்ரெட் கேம்ஸ்' மற்றும் கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி ஆகியோர் இணைந்து `லாஸ்ட் ஸ்டோரீஸ்' என இரண்டு வெப்சீரிஸும் இயக்கியிருக்கிறார்.

`சாக்ரெட் கேம்ஸ்'ல் சைஃப் அலி கான், நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா, ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே ஆகியோரும், `லஸ்ட் ஸ்டோரீஸ்'ல் பூமி பெட்நெகர், நீல் பூபாளம், கைரா அத்வானி, விக்கி கௌஷல், நேகா துபியா, மனீஷா கொய்ராலா, சஞ்சய் கபூர், ஜெய்தீப் அல்வாத், ராதிகா ஆப்தே, அகாஷ் தோஷார் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இதில் `சாக்ரெட் கேம்ஸ்' ஜூன் 6ம் தேதியிலிருந்தும், `லாஸ்ட் ஸ்டோரிஸ்' ஜூன் 15ம் தேதியிலிருந்தும் ஒளிப்பரப்பாக இருக்கிறது. வெப்சீரிஸ் பிரியர்களை குறிவைத்து பிராந்திய மொழிகளிலும் பல தயாரிப்புகளில் இறங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். தொடர்ந்து விரைவில் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் முன்னணி இயக்குநர்கள் வெப்சீரிஸ் இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்